விதிமுறைகளை மீறிய 2 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து


விதிமுறைகளை மீறிய 2 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து
x
தினத்தந்தி 18 Feb 2022 1:34 AM IST (Updated: 18 Feb 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை மீறியதாக சிவகாசி அருகே செயல்பட்டு வந்த 2 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தாயில்பட்டி
விதிமுறைகளை மீறியதாக சிவகாசி அருகே செயல்பட்டு வந்த 2 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
விதிமீறல்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்வதற்காக வட்டாட்சியர்கள் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மஞ்சள் ஓடைப்பட்டியில் அய்யாதுரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தி முடிந்த பிறகு சாம்பிள் வெடி வெடித்து பார்த்தனர். அப்போது எதிர்பாராமல் சாம்பிள் பட்டாசில் இருந்து தீ விழுந்ததில் கருமருந்து இருந்த அறை தீப்பிடித்தது. இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பின்பும் விதிமுறைகளை மீறி தொழிலாளர்களை பட்டாசு ஆலையில் பணிபுரிய அனுமதித்தது தெரியவந்தது. 
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், வெம்பக்கோட்டை தாசில்தார் சுந்தரமூர்த்தி ஆகியோர் அந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.
உரிமம் ரத்து
மேலும் சிவகாசி அருகே துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை அருகில் தகரசெட் அமைத்து பட்டாசு உற்பத்தி நடைபெற்றதால் விதிமீறல் நடவடிக்கையாக இந்த பட்டாசு ஆலையின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

Next Story