தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கொட்டகை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பள்ளத்தூரில் மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கொட்டகை அமைக்கப்பட்டது. இந்த கொட்டகை தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மண்புழு இயற்கை உரம் தயாரிப்பதற்காக கட்டப்பட்டிருந்த தொட்டிகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் கொட்டகையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து விஷபூச்சிகளின் கூடாரமாக திகழ்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்புழு இயற்கை உரம் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கொட்டகையை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பள்ளத்தூர் கிராம மக்கள், தஞ்சை.
Related Tags :
Next Story