முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்


முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 Feb 2022 2:16 AM IST (Updated: 18 Feb 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

அரியலூர்:

தர்ப்பணம்
மாசி மகத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதில் அரியலூர் நகரில் உள்ள கிருஷ்ணர், விநாயகர், சிவன் கோவில்களில் மாசி மகத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்தனர். இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு குழுக்களாக அமர வைக்கப்பட்டு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள பயறணீஸ்வரர் கோவில் அருகே உள்ள காண்டீபதீர்த்த குளத்தில் மறைந்த முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
மாசி மகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது
கீழப்பழுவூர்
திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் வைத்தியநாத சுவாமி கோவிலையொட்டி உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் வந்து ஆற்றில் குளித்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் வைத்தியநாத சுவாமி கோவிலில் வழிபட்டு, விளக்கேற்றி விட்டு சென்றனர். இதில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Next Story