மைத்துனருக்கு வீடியோ காலில் காட்டியவாறே தூக்குப்போட்டு விடுதி மேலாளர் தற்கொலை- ஏற்கனவே திருமணம் ஆனவர் காதல் தோல்வியால் விரக்தி
ஏற்கனவே திருமணம் ஆன விடுதி மேலாளர் ஒருவர் காதல் தோல்வியால் மைத்துனருக்கு வீடியோ காலில் காட்டியவாறே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடத்தூர்
ஏற்கனவே திருமணம் ஆன விடுதி மேலாளர் ஒருவர் காதல் தோல்வியால் மைத்துனருக்கு வீடியோ காலில் காட்டியவாறே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விடுதி மேலாளர்
கேரள மாநிலம் தாளை குளத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் (வயது 41). இவர் கோபி பஜனை கோவில் வீதியில் வீடு எடுத்து தங்கியிருந்தார். பின்னர் பெங்களூருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேலாளராக வேலை கிடைத்ததும் அங்கு சென்றுவிட்டார். அடிக்கடி கோபி வந்து செல்வார்.
ரியாசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரிதம் என்ற மகள் உள்ளார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன்-மனைவி இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.
காதல் தோல்வி
இந்தநிலையில் பெங்களூருவில் ரியாஸ் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
காதல் தோல்வி அடைந்ததால் விரக்தியில் இருந்த ரியாஸ் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இதற்காக பெங்களூருவில் இருந்து கோபி வந்தார். பின்னர் தன்னுடைய மைத்துனர் கேரளாவில் உள்ள நிஷாத் என்பவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் நான் ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் அவள் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டாள். எனக்கு வாழப்பிடிக்கவில்லை. அதனால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று வேட்டியால் மின்விசிறியில் தூக்குப்போட்டுள்ளார்.
தற்கொலை
ரியாஸ் தூக்குப்போடுவதை வீடியோ காலில் பார்த்து நிஷாத் வேண்டாம் என்று கத்தினார். ஆனால் அதை கேட்காமல் ரியாஸ் தூக்கில் தொங்கிவிட்டார்.
அதன்பின்னரும் நிஷாத் தொடர்ந்து செல்போனில் அழைத்துக் கொண்டே இருந்துள்ளார். ரியாசின் பக்கத்துவீட்டில் வசித்த ஒருவர் செல்போன் தொடர்ந்து ஒலிக்கிறதே என்று ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது ரியாஸ் தூக்கில் தொங்குவது தெரிந்தது. உடனே அவர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அனைவரும் சேர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
விசாரணை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மைத்துனருக்கு வீடியோ காலில் காட்டியவாறே விடுதி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story