அம்மாபேட்டையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரின் கதி என்ன?- தேடும் பணி தீவிரம்
அம்மாபேட்டையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் கதி என்ன? என்று தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டையில் அடித்துச்செல்லப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் கதி என்ன? என்று தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. பிரமுகர்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மங்கனன் என்கிற முனிய கவுண்டர் (வயது 64). சுமை தூக்கும் தொழிலாளி. அம்மாபேட்டை பேரூராட்சியின் 15-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக இருந்தார்.
நாளை (சனிக்கிழமை) நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வேலையை முடித்துக்ெகாண்டு அந்த பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
கதி என்ன?
அப்போது அவர் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் தண்ணீர் இழுத்ததால் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார். பொதுமக்கள் வருவதற்குள் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். பொதுமக்கள் இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
நேற்று காலை இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேசுதாஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மீனவர்களுடன் பரிசலில் சென்று தேடினார்கள். ஆனால் நேற்று மாலை வரை அவர் கிடைக்கவில்லை. கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை.
Related Tags :
Next Story