பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அஞ்சுகிராமம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரத்தை சேர்ந்தவர் அசலவன் (வயது 55). இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இவருடைய 2-வது மகள் ஷர்லின் (21). பி.காம் பட்டதாரியான இவர் வங்கி பணிக்கான தேர்வு எழுத தயாராக இருந்தார். இதற்காக அழகப்பபுரம் அருகே பொட்டல்குளத்தில் உள்ள ஒரு மையத்தில் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஷர்லின் சாப்பிட்டு விட்டு வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்க சென்றார்.
நேற்று அதிகாலையில் குடும்பத்தினர் ஷர்லின் அறைக்கு சென்ற போது அங்கு அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஷர்லினை தூக்கில் இருந்து இறக்கினர்.
அப்போது உடல் அசைவற்ற நிலையில் இருந்ததால் அவர் இறந்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து பட்டதாரி பெண் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story