தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 Feb 2022 3:12 AM IST (Updated: 18 Feb 2022 3:12 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் குறைகள் பற்றிய புகார் பெட்டி

ஆபத்தான பள்ளம் மூடப்படுமா? 

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் நரியாப்பட்டுகிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையோரங்களில் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

-சிவா, நரியாப்பட்டு.

கால்வாய் அமைக்க வேண்டும்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு 7-வது வார்டு சாத்கர் பகுதியில் சரியான சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லை. வீடுகளின் அருகிலேயே தேங்கும்நிலை உள்ளது. சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  -குமரன், பேரணாம்பட்டு.
  

மின்கம்பம் மாற்றியமைக்கப்படுமா? 

  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 10-வது வார்டு கருங்காலிகுப்பம் வ.உ.சி. தெருவில் சாலையின் நடுப்பகுதியில் மின் கம்பம் அமைந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. நீண்ட நாட்களாகியும் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றியமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மின்கம்பத்தை சாலையோரமாக மாற்றியமைக்க மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  எம்.குமார், கருங்காலிகுப்பம்.
  

கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பி 

  ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் பெரிய தெரு வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கிறது. இரண்டு கம்பங்களுக்கு நடுவே நீண்ட இடைவெளி இருப்பதால் உயர் அழுத்த மின்கம்பிகள் மிகவும்தாழ்வாக கைக்கு எட்டும் தூரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் மின்சார விபத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இதில் பெண் ஒருவர் சிக்கி காயமடைந்துள்ளார். எனவே மீண்டும் இதுபோன்ற விபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -சங்கர், புதுப்படட்டு.
  

பகலில் எரியும் தெருவிளக்குகள் 

  திருவண்ணாமலையை அடுத்த தச்சம்பட்டில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் மின்கம்பங்களில் இரவு நேரங்களில் போடப்படும் மின் விளக்குகள் பகலிலும் எரிந்த வண்ணம் உள்ளது. இதனால் அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பகலில் மின் விளக்குகள் எரிவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  குமரேசன், தச்சம்பட்டு.
  

Next Story