மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் விரக்தி சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை


மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் விரக்தி சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Feb 2022 4:30 PM IST (Updated: 18 Feb 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

சேப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் விரக்தியில் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, 

சென்னை சேப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அம்சா. இவருடைய கணவர் விஜி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு பிரகாஷ் (வயது 17) என்ற மகன் இருந்தார். 9-ம் வகுப்பு வரை படித்த பிரகாஷ், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். பிரகாஷ் தனது தாயாரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித்தருமாறு அடிக்கடி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் விரக்தி அடைந்த பிரகாஷ், நேற்று முன்தினம் இரவு பாரதிசாலையில் உள்ள ரேஷன் கடை முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story