ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி சாவு


ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி சாவு
x
தினத்தந்தி 18 Feb 2022 4:38 PM IST (Updated: 18 Feb 2022 4:38 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செங்குன்றம்,  

சென்னைைய அடுத்த திருவேற்காடு ராஜி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41). இவர், 2017-ம் ஆண்டு திருவேற்காட்டில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த 3-ந் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர், சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கைதி லட்சுமணன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதி லட்சுமணன் நோய்வாய்ப்பட்டுதான் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story