ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஸ்ரீபெரும்புதூர் ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை,
ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் என்ற படப்பை குணா (வயது 44). ரவுடியான இவர் மீது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான படப்பை குணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் ரவுடி படப்பை குணா, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று ரவுடி படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story