மது விலக்கு பிரசாரம்
மது விலக்கு பிரசாரம்
தமிழக அரசின், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் கிராமிய கலைக்குழுக்களை நியமித்து கலைநிகழ்ச்சி வாயிலாக மாவட்டம் முழுவதும் மது விலக்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசார கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுவை மறப்போம், மனிதனாக இருப்போம். மானத்தோடு வாழ மதுவை மறப்போம். போதையில் தள்ளாட்டம், வாழ்க்கையில் திண்டாட்டம். மதுவை நிறுத்து, மரணத்தை விரட்டு. மதுவினால் உயர்ந்தவர் யாருமில்லை, வீழ்ந்தோர் பலர்நினைவில் கொள்வோம், மதுவை ஒழிப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story