நிழற்குடை அமைக்க வேண்டும்
நிழற்குடை அமைக்க வேண்டும்
மடத்துக்குளம் தாலுகா நரசிங்கபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் தினசரி பல்வேறு நகரங்களுக்கு சென்று திரும்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பஸ்களில் பயணிக்கின்றனர். இந்த பயணிகள் பயன்பாட்டிற்காக தேசிய நெடுஞ்சாலை ஓரம் பஸ் நிறு த்தம் உள்ளது. இந்த இடத்தில் பயணிகள் காத்திருக்க நிழற்குடை இல்லை. எனவே நிழற் குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினத்தந்தி புகார் பெட்டி பாக்ஸ் வைக்கவும்
வேகத்தடை அமைக்க வேண்டும்
காங்கேயத்தில் இருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் ஊதியூரில் வாகனங்கள் அதிக வேகமாகவும் அதிக சத்தமாக ஹாரன் அடித்தும் செல்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அதுபோல் ஊதியூர் முதல் தாசநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் வட்டமலை பாளையம் காலனி மெயின் ரோட்டில் அதிவேகமாக கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் தேங்காய் தொட்டி வண்டிகள், தண்ணீர் லாரிகள் கோழிப்பண்ணை வண்டிகள் செல்கிறது. எனவே விபத்து நடக்கும் முன்பு ஊதியூர் மற்றும் வட்டமலைபாளையம் காலனி மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும். வேகத்தடை அமைத்தால் பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்படும். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் 15 வேலம்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் ஆத்து பாளையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு ரோடு பராமரிப்பு நடைபெற்றது. அப்பொழுது தார்சாலை அமைக்கப்பட்டது. அதனால் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் சென்று கொண்டிருக்கிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்கம்பங்களில் தொங்கும் விளம்பர அட்டைகள்
காங்கயம் நகரில் அனைத்து மின் கம்பங்களிலும் விளம்பர அட்டைகளை கட்டிச் சென்று விடுகின்றனர். மின் கம்பம் தனியார் விளம்பரம் செய்யக் கூடிய இடமல்ல. சில மின் கம்பங்களில் திடீரென்று மின்சாரம் பாய்வதுண்டு. அப்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும். மின்தடை ஏற்படும்போது மின்வாரிய ஊழியர் எப்படி கம்பத்தில் ஏற முடியும்? எனவே மின்கம்பங்களில் விளரம்ப அட்டை தொங்க விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story