கொரோனா தொற்றால் 41 பேர் பாதிப்பு - ஒருவர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 41 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 1,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா தொற்றால் 1,934 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Related Tags :
Next Story