திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் பெரியகுப்பம் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பாலாஜி (வயது 23). எம்.சி.ஏ. பட்டதாரியான பாலாஜி அரக்கோணத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடித்தபின்பு மோட்டார் சைக்கிளில் திருத்தணி வழியாக திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story