மீனவர்களுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
தருவைகுளம் மீனவர்களுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தருவைகுளம் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் “ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு” குறித்த 2 நாள் பயிற்சி நடந்தது. பயிற்சியில் தருவைகுளம் பஞ்சாயத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேர் பங்கேற்றனர்.
பயிற்சி நிறைவு விழாவுக்கு தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுஜாத்குமார் தலைமை தாங்கி பயிற்சி கையேட்டை வெளியிட, பஞ்சாதய்து தலைவி காடோடி பெற்றுக் கொண்டார். உதவி பேராசிரியர் விஜய் அமிர்தராஜ் வரவேற்று பேசினார். பயிற்சியில் மீன்வளக்கல்லூரி முதல்வர் சுஜாத்குமார் பேசும் போது, கடலில் கூண்டுகள் அமைத்து மீன்களை வளர்ப்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. எதிர்கால மீன் தேவையை கூண்டுகளின் மூலம் வளர்க்கப்படும் மீன்களே பூர்த்தி செய்யும் என்று கூறினார். தொடர்ந்து பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டனர். திட்ட உதவியாளர் மரிய சகாய கிறிஸ்டிகா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story