கடலில் மூழ்கி என்ஜினீயர் சாவு


கடலில் மூழ்கி என்ஜினீயர் சாவு
x
தினத்தந்தி 18 Feb 2022 9:46 PM IST (Updated: 18 Feb 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி என்ஜினீயர் உயிரிழந்தார்.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி என்ஜினீயர் உயிரிழந்தார். 
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மழுவன் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருடைய மகன்கள் விஜய் (வயது 23). என்ஜினீயர். விக்னேஷ் (25). இவர்கள் மற்றும் நண்பர்களான மணிகண்டன், கோபால்சாமி ஆகியோர் கடந்த 16-ந்தேதி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
அங்கு அவர்கள் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
கடலில் மூழ்கி என்ஜினீயர் சாவு
பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் கடலில் குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலை விஜய், விக்னேஷ் ஆகிய இருவரையும் இழுத்து சென்றது. இதை பார்த்த நண்பர்கள் சத்தம் போட்டனர். இதை கேட்டு அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் வந்து கடலில் இறங்கி தேடி 2 பேரையும் மீட்டனர். இதில் விஜய் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், விக்னேசை சிகிச்சைக்காகவும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழையூர் கடலோரக் காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story