விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் மோகன் எச்சரிக்கை


விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது சட்டப்படி  நடவடிக்கை கலெக்டர் மோகன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2022 9:49 PM IST (Updated: 18 Feb 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


விழுப்புரம், 

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் அருகே இளங்காடு ஏரியில் ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த ஏரி ஆக்கிரமிப்புகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் மோகன், அந்த ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடும் நடவடிக்கை

மேலும் இதுபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், ஏரிகள் மற்றும் குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு) சிவருத்ரையா, விழுப்புரம் கோட்டாட்சியர் (பொறுப்பு) பெருமாள், தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story