கேளையாடு இறைச்சி பறிமுதல்; ரூ.5 லட்சம் அபராதம்


கேளையாடு இறைச்சி பறிமுதல்; ரூ.5 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 18 Feb 2022 10:03 PM IST (Updated: 18 Feb 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே கேளையாடு இறைச்சியை காரில் கொண்டு வந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பெரும்பாறை: 

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் திண்டுக்கல் மண்டல வனபாதுகாப்பு படை வனச்சரகர் விஜயகுமார் மற்றும் வனத்துறையினர் வாகன தணிக்கையில்  ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அய்யம்பாளையம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் சுமார் 2 கிலோ கேளையாடு இறைச்சி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்து காரில் வந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 47), கொங்கபட்டியை சேர்ந்த செல்வம் (53), குப்பம்மாள்பட்டியை சேர்ந்த அருள் (42), நல்லூர்காட்டை சேர்ந்த தேவராஜ் (42), மதுரை நரிமேட்டை சேர்ந்த குணசேகரன் (37) என்பது தெரியவந்தது.

 அவர்கள் பெரும்பாறை அருகே உள்ள குப்பம்மாள்பட்டி பகுதியில் காபி தோட்டத்தை குத்தகைக்கு எடுக்க சென்றதும், அங்கு செந்நாய் கடித்து இறந்து கிடந்த கேளையாட்டின் இறைச்சியை எடுத்து கொண்டு செல்வதாகவும் கூறினர். 

பின்னர் அவர்களை கன்னிவாடி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல், வனவர் அறிவழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 5 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.5 லட்சம்  அபராதம் விதித்தனர். 

Next Story