வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 18 Feb 2022 10:03 PM IST (Updated: 18 Feb 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

நாகப்பட்டினம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
உள்ளாட்சி தேர்தல்
நாகை மாவட்டத்தில்  நாகை நகராட்சியில் 36 வார்டுகளும், வேதாரண்யம் நகராட்சயில் 21 வார்டுகளும்,, கீழ்வேளூர், திட்டச்சேரி, தலைஞாயிறு, வேளாங்கண்ணி ஆகிய 4 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் வீதம் 60 வார்டுகள் உள்ளன. 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளில் மொத்தம் 117 வார்டுகள் உள்ளன. 
இதில் நாகை நகராட்சியில் உள்ள ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் 116 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று(சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும் வகையில் மாவட்டத்தில் 188 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
நாகை நகராட்சியில் 35 வார்டுகளுக்கு 88 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்கள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 
வாக்குப்பதிவையொட்டி நேற்று மாலை வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்,  வாக்காளர் பட்டியல், அழியாமை, குண்டூசி, சணல் உள்ளிட்ட 101 வகையான பொருட்கள் நாகை நகராட்சி அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பாக வேனில் அனுப்பி வைக்கப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் பார்வையாளர் மணிவேலன், தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்ரீதேவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வீதம் 88 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு மண்டலத்திற்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரிசர்வேசன் அடிப்படையில் என்று 100 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
13 வாக்குச்சாடிகள் பதற்றமானவை
. நாகை நகராட்சியில் 13 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நோய்த்தடுப்பு மருந்து பெட்டகங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் குகன் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர்  பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் எழுது பொருட்கள் உள்பட உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பி வைக்கப்பட்டது.
இதேபோல வேதாரண்யம் நகராட்சி, திட்டச்சேரி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி ஆகிய 3 பேரூராட்சிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story