ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50½ லட்சம் பறிமுதல்


ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Feb 2022 10:15 PM IST (Updated: 18 Feb 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50½ லட்சம் பறிமுதல்

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் அதன் எல்லைகளில் 5 கி.மீ. சுற்றளவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இங்கு தலா 3 என மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது.

அவர்கள் சோதனை மேற்கொண்டு, ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சத்து 53 ஆயிரத்து 760 பறிமுதல் செய்தனர். இதில் இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததாக ரூ.34 லட்சத்து 48 ஆயிரத்து 550 உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


Next Story