2 கார்களை சிறைபிடித்த கிராம மக்கள்
2 கார்களை சிறைபிடித்த கிராம மக்கள்
கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் தி.மு.க.வினர் வீடு வீடாக பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அங்கு கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் 2 கார்களை சிறைபிடித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க.வினரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கு பறக்கும் படை அலுவலர் மலைச்சாமி தலைமையில் அலுவலர்கள் மற்றும் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் போலீசார் வந்தனர். பின்னர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், பணம் பட்டுவாடா தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை போலீசாரே விடுவித்தனர். இது கிராம மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், ஓட்டு போட செல்பவர்களை தடுத்து நிறுத்த உள்ளதாகவும் அறிவித்தனர்.
Related Tags :
Next Story