கள்ளக்குறிச்சியில் தி மு க வினர் கொடுத்த பால் பாக்கெட்டுகளை தெருவில் வீசி எறிந்த வாக்காளர்கள்


கள்ளக்குறிச்சியில்  தி மு க வினர் கொடுத்த பால் பாக்கெட்டுகளை தெருவில் வீசி எறிந்த வாக்காளர்கள்
x
தினத்தந்தி 18 Feb 2022 10:34 PM IST (Updated: 18 Feb 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் தி மு க வினர் கொடுத்த பால் பாக்கெட்டுகளை வாக்காளர்கள் தெருவில் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி

பால்பாக்கெட்டுகள் வினியோகம்

கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டு கவுன்சிலர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 46 வாக்குச்சாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் 19-வது வார்டுக்குட்பட்ட கரியப்பாநகர் பகுதியில் தி.மு.க. வினர் வாக்காளர்களுக்கு ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை வாங்கிய 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு பால் பாக்கெட் வேண்டாம் என அவற்றை அதே பகுதியில் கோவில் முன்புள்ள தெருவில் வீசி எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

போலீசார் விசாரணை

அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து தெருவில் வீசப்பட்ட பால்கெட்டுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதேபோல் 7-வது வார்டுக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியிலும் தி.மு.க. வினர் வாக்காளர்களுக்கு பால் பாக்கெட்டுகளை கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. வினர் அதுபற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
வாக்காளர்களுக்கு பால்பாக்கெட்டுகள் வினியோகம் செய்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story