மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மக்காச்சோளம் பயிரை தாக்கும் படைப்புழுக்கள்


மூங்கில்துறைப்பட்டு பகுதியில்  மக்காச்சோளம் பயிரை தாக்கும் படைப்புழுக்கள்
x
தினத்தந்தி 18 Feb 2022 10:40 PM IST (Updated: 18 Feb 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மக்காச்சோளம்பயிரில் படைப்புழு தாக்குல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

மூங்கில்துறைப்பட்டு

படைப்புழு தாக்குதல்

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்கள், பருவகால பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மூங்கில்துறைப்பட்டு பகுதியில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச் சோளம் பயிரிட்டு அதனை பராமரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்களில் அதிகளவில் படைப்புழு தாக்குதல் இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். 

விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, படைப்புழு தாக்குதலால் செடிகள் வளராமல் காய்ந்து வருவது மட்டுமின்றி அவற்றை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். தற்போதுள்ள நிலமையை பார்த்தால் சாகுபடி செய்ததற்கான செலவையாவது எடுக்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த எந்த வகையான மருந்து தெளிக்க வேண்டும் என்று ஆலோசனை கேட்டாலும் அதற்கும் அவர்கள் சரியான பதில் அளிப்பதில்லை. எனவே மாவட்ட வேளாண் உயர் அதிகாரிகள் மக்காச் சோள பயிர்களை நேரில் ஆய்வு செய்து படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர்.

Next Story