கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2022 10:41 PM IST (Updated: 18 Feb 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பேரூராட்சிகளான ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், நாகோஜனஅள்ளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை என 6 பேரூராட்சிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், படிவங்களான - 11, 12, 13, 18, 21, 22, 23, சட்டமுறை சாரா படிவங்கள், வாக்காளர் பதிவேடு, வாக்குப்பதிவு பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள், உறைகள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலிகள், கொரோனா நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆய்வு 
இதில், பர்கூர் பேரூராட்சி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேவையான பொருட்கள் அனுப்பும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையாளர் முருகேசன், பர்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், வேட்பாளர்கள் முகவர்கள் உடனிருந்தனர்.

Next Story