ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் பலி


ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் பலி
x
தினத்தந்தி 18 Feb 2022 10:46 PM IST (Updated: 18 Feb 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலத்தில் உள்ளாட்சி தேர்தலி்ல் வாக்களிக்க வந்த பெயிண்டர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.

மயிலாடுதுறை:
குத்தாலத்தில் உள்ளாட்சி தேர்தலி்ல் வாக்களிக்க வந்த பெயிண்டர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் பலி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை பூர்வீகமாக கொண்டவர் பாபு. இவர், தற்போது திருச்சி பொன்மலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜு (வயது 30). இவர் திருச்சியில் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குத்தாலம் பேரூராட்சியில் ஓட்டு போடுவதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான குத்தாலம் வந்த ராஜு, ரெயில் நிலையம் அருகே உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கி உள்ளார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை குத்தாலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் ராஜுவின் உடல் சிதறி கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜு நள்ளிரவில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. 
போலீசார் விசாரணை 
மேலும் ராஜுவிற்கு சரியாக காது கேட்காத காரணத்தினால் ரெயில் வந்ததை அறியாமல் அவர் விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ராஜுவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story