கள்ளக்குறிச்சி அருகே உயர் மின்னழுத்தம் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
கள்ளக்குறிச்சி அருகே உயர் மின்னழுத்தம் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமம் வடக்கு தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அப்பகுதி மக்கள் வீடுகளில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன. இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். உயர் மின்னழுத்தம் ஏற்பட்டது குறித்து வருவாய் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story