வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் 23 ஆயிரத்து 838 ஆண் வாக்காளர்கள், 26 ஆயிரத்து 405 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 50 ஆயிரத்து 245 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 27 ஆண் வாக்குச்சாவடிகள், 27 பெண் வாக்குச்சாவடிகள், 3 பொது வாக்குச்சாவடிகள் என 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறும் நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. முன்னதாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
80 வகையான பொருட்கள்
திருவாரூர் நகரில் உள்ள 30 வார்டுகளை 4 மண்டலமாக பிரித்து மண்டல அலுவலர்கள் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதனுடன் வாக்குப்பதிவுக்கான மை, அந்த வார்டு வாக்காளர் பட்டியல், வார்டு வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட 80 வகையான பொருட்கள் வேனில் ஏற்றி வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story