திருவாரூர் மாவட்டத்தில் 282 வாக்குச்சாவடிகள் அமைப்பு
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 282 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 37 பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 282 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 37 பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 215 உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு ஒரே கட்டமாக இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குச்சாவடிகள்
இந்த தேர்தலுக்காக வாக்குசாவடிகள் தேவையான பாதுகாப்பு வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவாரூர் நகராட்சியில் 57, மன்னார்குடி நகராட்சியில் 67, திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 25, கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பேரளம் பேரூராட்சியில் 12, நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி வலங்கைமான், நீடாமங்கலம பேரூராட்சிகளில் தலா 15, முத்துப்பேட்டை பேரூராட்சியில் 22 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தபால் ஓட்டு
திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் 282 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 37 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. திருவாரூர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வாசலில் தபால் ஒட்டு போடுவதற்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தலில் பணியாற்றும் உழியர்கள், போலீசார் தபால் ஓட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குப்பெட்டியில் தங்களது ஒட்டுகளை பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story