1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
வாக்குப்பதிவு
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இத்தேர்தலில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள், பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகள் என மொத்தம் 215 வார்டுகளுக்கு 282 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
ஆய்வு
இந்தநிலையில் திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குப்பதிவுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தேவையான உபகரணங்கள் உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு சக்கர நாற்காலி வசதிகள் இருப்பதை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது
1200 போலீசார்
திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 21 வாக்குச்சாவடிகள், 7 பேரூராட்சிகளில் 16 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 37 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 1364 அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார்.
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பிரபாகரன் இருந்தார்.
Related Tags :
Next Story