கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் சாவு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 18 Feb 2022 11:21 PM IST (Updated: 18 Feb 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கட்டளையை சேர்ந்தவர் மணி(வயது 75). சம்பவத்தன்று ஆடுகளை காவிரிக்கரை  ஓரத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஆடு ஒன்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது. ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் மணி கிணற்றில் குதித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மணி பக்கவாட்டு சுவற்றில் தலை மோதியதில் தண்ணீரில் விழுந்து மூழ்கி பலியானார். இதில் ஆடும்  பலியானது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story