மோட்டார் சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதல் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதல் வாலிபர் பலி
x
தினத்தந்தி 18 Feb 2022 11:27 PM IST (Updated: 18 Feb 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் - சரக்கு ஆட்டோ மோதல் வாலிபர் பலியானார்.

பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கீழப்பள்ளம் கொல்லை பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 21). இவர், நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கீழப்பள்ளம் கொல்லையில் இருந்து செம்பனார்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். கிடாரங்கொண்டான் மெயின்ரோட்டில்  சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சந்தோஷ்குமார் இறந்து விட்டதாக கூறினார். 
இதுகுறித்து செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்- இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story