வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்கள், வேட்பாளர்கள் செல்போன் பயன்படுத்த தடை


வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்கள், வேட்பாளர்கள் செல்போன் பயன்படுத்த தடை
x
தினத்தந்தி 18 Feb 2022 11:33 PM IST (Updated: 18 Feb 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்கள், வேட்பாளர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களில் தலைைம அலுவலரால், வாக்குப்பதிவு தொடங்கிய விவரம் மற்றும் பதிவான வாக்குகள் விவரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மட்டும் செல்போன் பயன்படுத்தலாம். மற்ற வாக்குச்சாவடி அலுவலர்களோ, வேட்பாளர்களோ மற்றும் வாக்குச்சாவடி முகவர்களோ வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதியில்லை என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Next Story