அரக்கோணம் அருகே நடந்த முகாமில் பிரத்யேக அடையாள அட்டை, மருத்துவ காப்பீடுக்கு 359 பேர் பதிவு
பிரத்யேக அடையாள அட்டை, மருத்துவ காப்பீடுக்கு 359 பேர் பதிவு செய்தனர்.
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டைக்கு பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் முன்னிலை வகித்தார். முகாமில் 477 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 182 பேருக்கு பிரத்யேக அடையாள அட்டை பதிவேற்றம் செய்யப்பட்டது. 127 பேருக்கு பிரத்யேக அடையாள அட்டைக்கு விண்ணப்பிம் பெறப்பட்டது. 232 பேருக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்யப்பட்டது.
மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு நிதிஉதவிக்கு 33 பேர், கடும் ஊனமுற்றோருக்கான உதவித்தொகைக்கு 57 பேர், பெட்ரோல் ஸ்கூட்டருக்கு 17 பேர், பேட்டரி வீல் சேருக்கு 7 பேர், காதொலி கருவிக்கு 9 பேர், சக்கர நாற்காளிக்கு 9 பேர் விண்ணப்பங்கள் கொடுத்தனர்.
முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜன், கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் கூறுகையில் அரக்கோணம் தாலுகாவில் கடந்த 4 நாட்கள் நடைபெற்ற முகாமில், 475 நபர்களுக்கு பிரத்யேக அடையாள அட்டைக்கு பதிவேற்றமும், புதிய பிரத்யேக அடையாள அட்டைக்கு 257 நபர்கள் பதிவும், 621 நபர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவும் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
Related Tags :
Next Story