வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு. கலெக்டர், டி.ஐ.ஜி. பார்வையிட்டனர்
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆகியோர் பார்வையிட்டனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆகியோர் பார்வையிட்டனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
வேலூர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நகர்ப்புற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 419 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தக்கூடிய மை, முத்திரை உள்ளிட்ட பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது:-
டோக்கன்
வேலூர் மாவட்டத்தில் 7 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை (இன்று) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் 3,101 அரசு ஊழியர்கள், 1,402 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று (நேற்று) 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் அவர்களுக்கு தேர்தல் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் மண்டல அலுவலர்களிடம் வாக்குச்சாவடிகள் வாரியாக பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது. அந்த பொருட்கள் வேன்களில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது. நகராட்சி தேர்தல் பார்வையாளர் வெங்கட்ராமன், குடியாத்தம் நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.திருநாவுக்கரசு தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள் சிசில்தாமஸ், வி.முருகானந்தம், கே.பாலச்சந்தர், கே.சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் அனுப்பிவைக்கப்பட்டது.
வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள், கொரோனா தடுப்பு பொருட்களும், வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் மூன்று சக்கர நாற்காலிகளும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வாக்கு நடைபெறுவதையொட்டி
பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பேரூராட்சிகளில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு என்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story