திருவண்ணாமலை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருவண்ணாமலை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே உள்ள நூக்காம்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 54). இவரது மனைவி கவிதா. இவர்களது இளைய மகன் விஜய் (23), மோட்டார் சைக்கிள் மெக்கானிக். நேற்று முன்தினம் இவர் குடித்து விட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை திட்டி உள்ளனர். பின்னர் விஜயை சாப்பிட வைத்து விட்டு சுப்பிரமணியும், கவிதாவும் வீட்டின் வெளியே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.
பெற்றோர் திட்டியதால் மனவேதனையில் இருந்த விஜய் வீட்டை ஒட்டியுள்ள ஷீட் போட்ட வீட்டிற்குள் கதவை பூட்டி கொண்டு தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் வீட்டிற்குள் சுப்பிரமணியும், கவிதாவும் வந்தனர். அப்போது ஷீட் போட்ட வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போட்டு இருப்பதை கண்டு சந்தேகமடைந்து அவர்கள் கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்த போது விஜய் தூக்கில் தொங்கியபடி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஜயை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே விஜய் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story