பள்ளிகொண்டா வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பள்ளிகொண்டாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தனர்.
அணைக்கட்டு
வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், பெண்ணாத்தூர்் திருவலம் ஆகிய 4 பேரூராட்சிகளில் இன்று (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இங்கு பதிவாகும் வாக்குகள் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் எண்ணப்படுகிறது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் தேர்தல் பார்வையாளர் பிரதாப் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது திருவலம் மற்றும் பெண்ணாத்தூர் பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் 61 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
4 மற்றும் 5-வது வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டார். 4, 5 ,6, 11, 12, 16 ஆகிய வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால் அங்கு கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பள்ளிகொண்டா பேரூராட்சி தேர்தல் பார்வையாளர் விசுவநாதன், மண்டல அலுவலர் ரமேஷ், தேர்தல் அதிகாரி உமாராணி, இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story