வாக்குச்சாவடிகளுக்கு 93 மின்னணு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


வாக்குச்சாவடிகளுக்கு 93 மின்னணு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 18 Feb 2022 11:35 PM IST (Updated: 18 Feb 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை நகராட்சியில் வாக்குச்சாவடிகளுக்கு 93 வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகராட்சியில் வாக்குச்சாவடிகளுக்கு 93 வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
77 வாக்குச்சாவடிகள்
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு நகரசபை உறுப்பினர் தேர்தல் நடைபெற இருந்தது. அதில் 19-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் அன்னதாட்சி என்பவர் இறந்து விட்டதால், அந்த வார்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து 35 வார்டுகளுக்கு மட்டுமே இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. 
இந்த 35 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள 77 வாக்குச்சாவடிகளுக்கு நேற்று மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இருந்து நகராட்சி தேர்தல் பார்வையாளரும், உதவி கலெக்டருமான பாலாஜி முன்னிலையில் வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 
93 வாக்குப்பதிவு எந்திரங்கள்
77 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு எந்திரங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் உடனே மாற்றி வாக்குப்பதிவு நடத்திட கூடுதலாக 16 வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் என மொத்தம் 93 வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்டு, போலீசார் பொதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Next Story