கண்மாயில் மண் அள்ளிய 2 வாகனங்கள் பறிமுதல்


கண்மாயில் மண் அள்ளிய 2 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Feb 2022 11:41 PM IST (Updated: 18 Feb 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே கண்மாயில் மண் அள்ளிய 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலூர்,

மேலூர் அருகே மணல் திருட்டை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ், கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், தர்மலிங்கம் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளலூர் அருகிலுள்ள வெள்ளநாயக்கம்பட்டியில் வேலிக்கண்மாயில் சிலர் மண் அள்ளும் எந்திரத்துடன் கிராவல் மண் திருடுவதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு போலீசார் வருவதை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ஒரு மண் அள்ளும் எந்திரம் மற்றும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்த கீழவளவு போலீசார் இதுகுறித்து கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி பழையூர்பட்டி இளையராஜா மற்றும் தேவன் பெருமாள் பட்டி சுந்தரமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story