மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது


மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 18 Feb 2022 11:44 PM IST (Updated: 18 Feb 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜீயபுரம்,பிப்.19-
திருச்சி அருகே மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
அரசு மேல்நிலைப்பள்ளி
திருச்சியை அடுத்த ராம்ஜிநகர் அருகே இனாம் குளத்தூரில் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகேசன்.
நேற்று முன்தினம் இப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. அப்போது, தேர்வு எழுதிய ஒரு மாணவியிடம் ஆசிரியர் முருகேசன் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம்.
சில்மிஷம்
பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து உறவினர்கள் மற்றும் தோழிகளிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியின் முன்பு குவிந்தனர். இதனையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருப்பதற்காக மற்ற ஆசிரியர்கள் ஆங்கில ஆசிரியர் முருகேசனை ஒரு அறையில் பூட்டி வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இனாம்குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் முருகேசன் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
ஆசிரியர் கைது
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், ஸ்ரீரங்கம் தாசில்தார் மகேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ஆசிரியர்முருகேசனை மீட்டு ஜீயபுரம் அனைத்துமகளிர்போலீஸ்நிலையத்திற்கு அழைத்துசென்றனர்.இந்தசம்பவம்குறித்துபாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Next Story