புகார் பெட்டி
புகார் பெட்டி
குப்பைத்தொட்டி வேண்டும்
திருவாரூர் நகராட்சி 4-வது வார்டு சம்மந்தம்பாளையம் பகுதியில் குப்பை தொட்டி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் வரத் தொடங்கி உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குப்பைத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா
பொதுமக்கள் திருவாரூர்
Related Tags :
Next Story