விஷம் குடித்து பள்ளி ஆசிரியை தற்கொலை


விஷம் குடித்து பள்ளி ஆசிரியை தற்கொலை
x
தினத்தந்தி 18 Feb 2022 11:51 PM IST (Updated: 18 Feb 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

மதுரை ஒத்தக்கடை பகுதியில் விஷம் குடித்து பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.

புதூர்,

மதுரை ஒத்தக்கடை புதுதாமரைப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருடைய மனைவி சங்கீதா(வயது 33). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த சில மாதங்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சங்கீதா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story