மனைவி கோபித்து கொண்டு மகள் வீட்டுக்கு சென்றதால் ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
நாகர்கோவிலில் மனைவி கோபித்துக் கொண்டு மகள் வீட்டுக்கு சென்றதால் ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மனைவி கோபித்துக் கொண்டு மகள் வீட்டுக்கு சென்றதால் ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கணவன், மனைவி தகராறு
நாகர்கோவில் கோட்டார் மீனாட்சி செட்டி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 63), ஓட்டல் ஊழியர். இவருடைய மனைவி உமா (53). குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த உமா, தேங்காப்பட்டணத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் கோபம் தணிந்த பிறகு நேற்று முன்தினம் இரவு உமா தனது கணவர் அய்யப்பனை செல்போனில் தொடர்பு கொண்டார்.
தற்கொலை
நீண்ட நேரமாகியும் அய்யப்பன் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன உமா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அய்யப்பன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
பின்னர் கோட்டார் போலீசார் விரைந்து வந்து அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனமுடைந்த அய்யப்பன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story