மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 8 பேர் கைது
தேர்தலையொட்டி விற்க மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் மேற்பார்வையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
மலைக்கோட்டை, பிப்.19-
தேர்தலையொட்டி விற்க மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் மேற்பார்வையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
கூடுதல் விலைக்கு விற்பனை
நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தலையொட்டிமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டன. திருச்சியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்போர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதிஎடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் பதுக்கிய 11 மதுபாட்டில்களை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த பார் உரிமையாளர் ரவியை தேடி வருகிறார்கள்.
இதேபோல் கோட்டை இ.பி.ரோடு பகுதியில் மது விற்ற மணிகண்டன் (வயது 23), விக்னேஷ் (22), பிரஜித் (35), கோமதி மற்றும் வீரகுமார் ஆகியோரிடமிருந்து நேற்று 567 மது பாட்டில்களை கோட்டை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 578 மது பாட்டில்களின் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும்.
மதுபாட்டில்கள் பதுக்கல்
இதேபோல் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராபாய் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் மணிகண்டம் அருகே நாகமங்கலம் மேக்குடி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாலக்கரை பகுதியை சேர்ந்த முன்னாள் பார் உரிமையாளர் பாக்கியராஜ் (37), நாகமங்கலத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (55), மணப்பாறை கோவில்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (45) ஆகியோர் தேர்தல் நாள் அன்று கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்க பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 680 ரூபாய் மதிப்புள்ள 864 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஜே.எம் 4-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேக்குடி அரசு டாஸ்மாக் மேற்பார்வையாளர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த பட்டன் மகன் ஆறுமுகம் (48) என்பவரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story