‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Feb 2022 12:34 AM IST (Updated: 19 Feb 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி சக்கரான் குளத்தின் அருகே  அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இந்த குளம் மூலம் விவசாயிகள் பாசன வசதி பெறுகிறார்கள். குப்பைகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசு அடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன், அப்பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரகுமத்துல்லா, புதுக்கோட்டை.
பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கு
புதுக்கோட்டை மாவட்டம்  சம்பட்டிவிடுதி பஞ்சாயத்து மேலவிடுதியில் அமைக்கப்பட்டு உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பெண்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும்.
ஜெயக்குமார், புதுக்கோட்டை.
காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா கோத்திராப்பட்டி ஒன்றியம் தெக்குப்பட்டியில் பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தொட்டி வைக்கப்பட்டு உள்ள பகுதி மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும், கடந்த 6 மாதங்களாக இந்த தண்ணீர் தொட்டி யாருக்கும் பயன்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவரஞ்சனி, புதுக்கோட்டை.
பாலம் கட்டித்தரக்கோரிக்கை
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையத்தில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் பாலம் தடுப்புச்சுவர் இன்றி உள்ளது. எனவே விவசாயிகள் இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளைபொருட்களை கொண்டு வரவும் அகலமான பெரிய பாலத்தை கட்டி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்ரா, கரூர்.

Next Story