பெண் தீக்குளித்து தற்கொலை


பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Feb 2022 1:07 AM IST (Updated: 19 Feb 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:
பாளையங்கோட்டை பெருமாள் வடக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சிவசண்முகம். இவருடைய மனைவி அருணாதேவி (வயது 58). இவர் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அருணாதேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story