மீனவர்கள் வலையில் சிக்கும் தாளஞ்சுறா மீன்கள்
அதிராம்பட்டினம் கடல்பகுதியில் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் கொண்ட தாளஞ்சுறா மீன்கள் சிக்குகின்றன.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் கடல்பகுதியில் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் கொண்ட தாளஞ்சுறா மீன்கள் சிக்குகின்றன.
தாளஞ்சுறா
சுறா மீன்களில் பல வகை உண்டு. இதில் தாளஞ்சுறா, பால்சுறா, கடிசுறா, கொம்பஞ்சுறா ஆகிய வகைகள் உண்டு. இதில் கடிசுறா பெரிதாக இருக்கும். இந்தவகை சுறாவும், கொம்பஞ்சுறாவும் இந்திய கடல் பகுதியில் கிடைப்பதில்லை. பால்சுறா மற்றும் தாளஞ்சுறா ஆகியவை அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் வரையிலான கடல்பகுதியில் கிடைக்கின்றன. மழை காலத்தில் தான் இந்தவகை மீன்கள் உற்பத்தியாகி மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கும். தற்போது அதிக அளவில் மீனவர்கள் வலையில் தாளஞ்சுறா மீன்கள் சிக்குகின்றன. இந்த தாளஞ்சுறா மீன்கள் மற்ற மீன்களை விட கடல் தண்ணீரை விட்டு ெவளியே வந்தபிறகும் எட்டு மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த மீன்களை பொதுமக்கள் மார்க்கெட்டில் வாங்கி செல்கின்றனர்.
மருத்துவ குணம்
இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், தாளஞ்சுறா மீன்கள் மருத்துவகுணம் உள்ளது. இது குழந்தைபெற்ற தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கும், குடல்புண் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மருந்தாக விளங்குகிறது. இதில் கொழுப்புச்சத்து இல்லை. எனவே ரத்தம் அழுத்தம் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் என்றார்.
Related Tags :
Next Story