வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 1:16 AM IST (Updated: 19 Feb 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:
கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி, வக்கீல்களின் அலுவலகம் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தினர். இதனை கண்டித்து அந்த தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டிற்கான கருப்பு தினமான இன்று (சனிக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் நேற்றே வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் வக்கீல்கள் சங்கத்தின் (பார் அசோசியேசன்) வக்கீல்களும், அட்வகேட்ஸ் அசோசியேசன் வக்கீல்களும் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வக்கீல்கள் புறக்கணிப்பால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

Next Story