தேவதானம் கோவிலில் தெப்பத்திருவிழா


தேவதானம் கோவிலில் தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 19 Feb 2022 1:17 AM IST (Updated: 19 Feb 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

தளவாய்புரம், 
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழாவும் ஒன்றாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரானா தொற்று காரணமாக இந்த திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு சுவாமி, தவம் பெற்ற நாயகி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 2-வது நாள் இரவு அம்மையப்பர் பிரியாவிடை அம்மன் ஒரு சப்பரத்திலும், தவம் பெற்ற நாயகி மற்றொரு சப்பரத்திலும் தெப்பத்தை வலம் வரும் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், செயல் அலுவலர் மகேந்திர பூபதி மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். 

Next Story