ெதாழிலாளி தீக்குளித்து தற்கொலை


ெதாழிலாளி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Feb 2022 1:30 AM IST (Updated: 19 Feb 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தூர், 
சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரசெல்வம் (வயது 27). கூலி தொழிலாளி. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இவர் கடந்த ஒரு வாரமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் மீண்டும் வயிற்று வலி அதிகமானதால்  வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை ஊற்றி  தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த தீக்காயங்களுடன் உயிர் இழந்த நிலையில் கிடந்த சுந்தரசெல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story