ஆண்டாளுக்கு தயிர்சாத படையல்


ஆண்டாளுக்கு தயிர்சாத படையல்
x
தினத்தந்தி 19 Feb 2022 1:42 AM IST (Updated: 19 Feb 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்ன கொடை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அன்ன கொடை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவில் நடைபெற்றது. இதற்காக 50 கிலோ தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கும், ரெங்க மன்னாருக்கும் படைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஆண்டாளுக்கு படைக்கப்பட்ட தயிர்சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்பட்டது. முன்னதாக  ஆண்டாள், ெரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story